சந்தன கடத்தல் வீரப்பனாக நடிக்கவிருப்பது யார்? மெளனம் கலைத்த இயக்குநர் !

ராம்கோபால் வர்மா அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் பெயர் கில்லிங் வீரப்பன். சந்தன வீரப்பனின் கதையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தில் வீரப்பனாக யார் நடிப்பார் என்பது ரகசியமாகவே இருந்தது.

சமீபத்தில் வீரப்பனாக நடிக்கவிருக்கும் நடிகருக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் சந்தீப் பரத்வாஜ் தான் வீரப்பனாக நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. தற்பொழுது படப்பிடிப்பும் நடைபெற்றுவருகிறது. அதற்கான முதல்பார்வை புகைப்படங்களை ராம்கோபால் வர்மா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காவல் துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன வீரப்பனின் சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுவருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஷிவ் ராஜ்குமார் நடிக்கிறார்.

கன்னட உலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று 108 நாட்கள் சிறையில் வைத்து பின்னர் விடுவித்தார். அதனால் தன் தந்தையை சிறைபிடித்த வீரப்பனை படத்தில் பழிவாங்குவதற்காக ஷிவ் ராஜ்குமாரை போலீஸ் அதிகாரியாக தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. கதையின் உண்மை நியாயத்தை எடுத்து சொல்லவே இப்படத்தை இயக்குவதாகவும், வீரப்பனின் வாழ்க்கையை இப்படத்தில் கூறவரவில்லை. வீரப்பனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ் அதிகாரியை மையப்படுத்தியே இப்படத்தின் கதை நகரும் என்று ராம்கோபால் வர்மா முன்னரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் லுக் போட்டோஸ்:

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!