மகேஷ்பாபுவுக்கு மூன்று நாயகிகள்: பிரம்மோத்சவம் அப்டேட்

 ஸ்ரீமந்துடு படத்தையடுத்து மகேஷ்பாபு ‘பிரம்மோத்சவம் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்துவருகிறது. இந்நிலையில் படத்தின் கதைப்படி மூன்று நாயகிகளாம் ஏற்கனவே சமந்தா, பிரணிதா என இரு நாயகிகள் நடிக்க உள்ளனர். 

மூன்றாவது நாயகியாக ரஷி கண்ணா நடிப்பதாக இருந்தார். ஆனால் தற்போது அந்த பாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். சமந்தா, காஜல் இருவரும் ஏற்கனவே ‘பிருந்தாவனம்’ படத்தில் இணைந்து நடித்தனர். அதே போல் சமந்தாவும், பிரணிதாவும் அத்தாரிண்டிக்கி தாரடி’ படத்தில் இணைந்து நடித்தவர்கள் என்பதால் மூவருக்குள்ளும் பரஸ்பரம் ஒரு நட்பு இருக்கிறது என தெலுங்கு சினிமா உலகம் தெரிவித்துள்ளது. 

விரைவில் துவங்கப்பட உள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் சிறப்பாக வெளியாக இருப்பதாக படத்திற்கு நெருங்கிவட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். அந்த படத்திற்கு முன்பு ஸ்ரீமந்துடு படம் வெளியாக இருக்கிறது. மகேஷ் பாபு படமென்றாலே தெலுங்குசினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா உலகிலும் ரசிர்கள் இருப்பது நாம் அறிந்ததே. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!