வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (04/07/2015)

கடைசி தொடர்பு:13:20 (04/07/2015)

ரஜினியை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்ட நிவின் பாலி!

மலையாளத்தில் மே மாதம் 29ம் தேதி வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘பிரேமம்’. அல்போன்ஸ் புதரென் இயக்கத்தில் நிவின் பாலி , மடோனா செபஸ்டியன், சாய் பல்லவி நடித்திருக்கும் படம். காதல் காமெடி படமான இப்படம் இப்போது மலையாள சினிமா ரசிகர்களின் டாப் லிஸ்ட் படம். 

இப்படத்தில் மலரே என்ற பாடல் இணையம் , ரேடியோக்கள் என வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பிடித்துள்ள ஒரு மழையில் நடக்கும் சண்டைக் காட்சி பலரையும் ஈர்த்துள்ளது. நிவின் பாலியின் நடிப்பும் பலராலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

எப்படி இந்த காட்சியில் நடித்தீர்கள் என நிவின் பவுலியிடம் கேள்விகளை கேட்க, மலையாளத்தில் எத்தனையோ நடிகர்கள் இருக்கும் போது அவர் ‘தளபதி’ படத்தில் ரஜினி மழையில் சண்டையிடும் காட்சியை இன்ஸ்பிரேஷனாக எடுத்து நடித்ததாக கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

தமிழ் ரசிகர்களையும் இந்த பிரேமம் படமும் சரி முக்கியமாக ‘மலரே’ பாடலும் சரி வெகுவாக கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்