பாகுபலி பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமெளலி

 இந்தியத் திரையுலகே எதிர்பார்க்கும் பிரமாண்ட படம் பாகுபலி வரும் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பாகுபலி படம் வெளியாவதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று ஏற்கெனவே படத்தின் இயக்குநர் ராஜமெளலி தெரிவித்திருந்தார். அதனபடி 35% பட வேலைகள் முடிந்துவிட்டதாம். இன்னும் 1 வருட படப்பிடிப்பு நடத்தினால் அடுத்த வருடம் பாகுபலி பார்ட் 2 வெளியாகும். முதல் பாகத்தில் வரும் வசூலை மையப்படுத்தே அடுத்த பாகத்திற்கான செலவுகளும், தொடர்ந்து வெளியீடும் இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே பாகுபலி பாகம் இரண்டில் சூர்யா நடிக்கவிருப்பதாக பல செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் வட்டமடித்தன. இதைப்பற்றி ராஜமெளலி பேசும் போது, “ பாகுபலி படத்தில் சூர்யா இல்லை. அவ்வாறு வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. நாங்கள் பாகுபலி படத்தை வெளியிடும் வேலைகளில் இருக்கிறோம்” என்று சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஜமெளலி.

சமீபத்தில் சென்சாருக்கு சென்று யூ/எ சான்றிதழுடன், தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஜூலை 10ம் தேதி சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகளவில் பாகுபலி வெளியாகவிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!