மீண்டும் சலங்கை ஒலி....சாத்தியமாகுமா? | Again Salangai Oli... Will Come True?

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (07/07/2015)

கடைசி தொடர்பு:13:39 (07/07/2015)

மீண்டும் சலங்கை ஒலி....சாத்தியமாகுமா?

ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு, ஆசையென ஒரு சந்திப்பின் போது ‘சிப்பிக்குள் முத்து’ ,’சலங்கை ஒலி’ போன்ற படத்திற்கு இசையமைக்க வேண்டும் என தெரிவித்தார். கண்டிப்பாக ஒரு இசையமைப்பாளருக்கு இந்த படங்கள் கொஞ்சம் சவாலான படங்களே. இசையளவிலும் கதை அளவிலும் இந்த படங்கள் மெகா ஹிட்டான படங்கள்.  

இந்நிலையில் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க ஒப்புக் கொண்டால் சாகர சங்கமம் (சலங்கை ஒலி) படம் போல் ஒரு படத்தை இயக்க தயார் என கூறியுள்ளார் இயக்குநர் கே.விஸ்வநாதன். சலங்கை ஒலி உள்ளிட்ட பல மெகா ஹிட் படங்களை இயக்கிய மிகப்பெரிய இயக்குநரிடம் இருந்து வாய்ப்பு என்பது வளர்ந்துவரும் ஒரு முன்னணி நடிகருக்கு சரியான வாய்ப்பு என்றே சொல்லவேண்டும். 

இந்நிலையில் ஜூனியர் என்.டிஆர் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வாரா? அதே போல் மாடர்ன் நாயகனின் இந்த படம் ஆரம்பித்தால் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவும் நினைவாகுமா? என்பது சினிமா உலகின் கேள்வியாக மாறியுள்ளது. மாடர்ன் இசை கலந்த ஒரு சங்கீத படம் என்பது இக்கால இளைஞர்களுக்கும் சற்றே புதுமையாக இருக்கும் என்பதால் ஜூனியர் என்.டி.ஆரின் பதிலுக்காக திரையுலகம் காத்திருக்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close