பாகுபலிக்காக ஆடு 'பலி'

லகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பாகுபலி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் வெற்றி பெறவேண்டுமென ரசிகர்கள் ஆடு பலியிட்டு வேண்டுதல் நடத்தியுள்ளனர்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. அமெரிக்காவில் பாகுபலியின் தமிழ், தெலுங்குப் பதிப்புகள் கிட்டத்தட்ட 300 அரங்குகளில் வெளியாகின. இந்த இரு பதிப்புகளுமே பிரிமியர் காட்சிகளில் அதிக வசூலைக் குவித்து சாதனைப் படைத்து வருகின்றன. 

ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் பாகுபலி படம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இன்று பாகுபலி படம் வெளியானது. இந்த படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் ஆடு பலி கொடுத்துள்ளனர். ஹைதராபாத் அருகேயுள்ள தியேட்டர் ஒன்றில் பாகுபலி போஸ்டர் முன்பு அந்த ஆட்டினை வெட்டி ரத்தத்தை எடுத்து போஸ்டர் மீது தெளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!