பிரபாஸ் டார்லிங்....சொல்கிறார் தமன்னா!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் ரிலீஸ் ஆகியுள்ள படம் ‘பாகுபலி’. படத்தின் ரிலீஸ் ஆன நேற்று இந்தியா முழுக்க பாகுபலி மயமாகவே இருந்தது.

முதல் பாகமான இந்த பாகுபலியை பொருத்தமட்டில் தமன்னாவே ஹீரோயின் எனலாம். மேலும் போராளியாக தோன்றும் தமன்னா ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு காதல் ரசம் ததும்ப கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனம், ரொமான்ஸ் என பிரபாஸுடன் இவர் வரும் காட்சி யூத் சென்ஷேனல் தான்.

இவர்கள் ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பலராலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் தமன்னா பிரபாசை டார்லிங் என கூறியுள்ளார். மேலும் ‘ தெலுங்கின் உண்மையான டார்லிங் பிரபாஸ் வீட்டிலிருந்து வந்த சுவையான உணவை தவறவிட்டதாக சமீபத்தில் ‘ பகிர்ந்துள்ளார் தமன்னா.

தமன்னாவை தேடிபிடித்து ஹீரோயினாக நடிக்க வைக்க முயன்று வரும் இளம் நாயகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம் என்றே சொல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!