வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (11/07/2015)

கடைசி தொடர்பு:18:15 (11/07/2015)

பாகுபலியை விமர்சித்து மற்ற இயக்குநர்கள், நடிகர்களை சீண்டிய ராம் கோபால் வர்மா!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் ரிலீஸ் ஆகியுள்ள படம் ‘பாகுபலி’. படத்தின் ரிலீஸ் ஆன நேற்று இந்தியா முழுக்க பாகுபலி மயமாகவே இருந்தது.

இந்த படத்திற்கு இசை கீரவாணி. இந்த படத்தை பார்த்த அனைவரும் பிரம்மாண்டம், மேக்கிங் என புகழ்ந்து வருகிறார்கள். தற்போது தெலுங்கின் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா படம் குறித்து ட்விட்டரில் பல கருத்துகளை தெரிவித்துள்ளார். 

நல்ல கான்செப்ட்டுடன் இணைந்த பெரிய நடிகரின் படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என ’பாகுபலி’ நிரூபித்துவிட்டது’, ’முதல் முறையாக நடிகர் பிரபாஸைக் காட்டிலும் அவரது படம் பெரிய விஷயமாக இருக்கிறது.  ’அனைத்து நடிகர்களுக்கும் தங்களை தாங்களே பெரிய நடிகர்களாக நிரூபிக்க, ‘பாகுபலி’ ஒரு எச்சரிக்கை மணி ஓசை’.

இந்த சினிமா உலகில் சிங்கங்கள், புலிகள், அனகோண்டா, யானைகள் என இருப்பினும் ‘பாகுபலி’ என்ற ஒற்றை டைனோசரஸ் வெளியாகி, உயிர் பிழைக்கும் முறையையே மாற்றியமைத்து விட்டது. மற்ற இயக்குநர்கள் பொறாமையிலேயே உங்களை விழுங்க போகிறார்கள் ராஜமௌலி. அடுத்த படம் கொடுக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக சினிமா உலகில் படமே இல்லாமல் போய்விடும் என கொஞ்சம் கருத்துகளில் பல பெரிய ஹீரோக்கள், மற்றும் இயக்குநர்களை சீண்டி விட்டுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

இதற்கு முன்பு ’ஓ காதல் கண்மணி’ படம் பார்த்துவிட்டு, மம்முட்டியையும் துல்கரையும் ஒப்பிட்டு பேசி துல்கரிடம் அமைதியான முறையில் வாங்கிக் கட்டிக் கொண்டார் தற்போது ‘பாகுபலி’ படத்தையும் மற்ற இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை சீண்டியதால் என்ன கிடைக்கப் போகிறதோ என தெலுங்கு சினிமா உலகம் சலசலக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்