தெலுங்கில் அறிமுகமாகிறார் அருண் விஜய்? | Arun Vijay gonna Introduce in Telugu Movie?

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (13/07/2015)

கடைசி தொடர்பு:12:38 (13/07/2015)

தெலுங்கில் அறிமுகமாகிறார் அருண் விஜய்?

 'முறை மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அருண் விஜய். தொடர்ந்து ‘ப்ரியம்’, ’கங்கா கௌரி’, ’காத்திருந்த காதல்’ பாண்டவர் பூமி ‘ என பல படங்களில் நடித்தார். சினிமாவில் 1995ல் அறிமுகமான அருன் விஜய் எவ்வளவோ படங்களில் நடித்தும் , தடையற தாக்க, மலை மலை போன்ற ஹிட் படங்கள் கொடுத்தும் கூட அவருக்கு தகுந்த அங்கீகாரம் இல்லாமலே இருந்தது. 

இந்த வருடன் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் , த்ரிஷா, அனுஷ்கா நடித்து வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த போதுதான் ரசிர்களிடம் பாராட்டுகளையும், நல்ல நடிப்பிற்கான விமர்சனங்களையும் பெற்றார். 

தற்போது அடுத்த கட்டமாக அருண்  விஜய்  தெலுங்கில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்தில் தான் இவர் நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்திற்கு இசை தமன். ஆக்‌ஷன் கதைக்களமாக உருவாக உள்ள இந்த படத்தை ஸ்ரீனு வையிட்லா இயக்க இருக்கிறார். 

சமீபத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தை பார்த்த இயக்குநர் ஸ்ரீனு அருண் விஜய்யின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவரிடம் பேசியதாகக் கூறபடுகிறது. அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக இவர் நடிப்பில் ‘வா’ படம் ரிலீஸ்க்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close