வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (14/07/2015)

கடைசி தொடர்பு:15:33 (14/07/2015)

ஃபகத் ஃபாசில், பார்வதி நடிப்பில் ‘விர்ஜின்’!

 மலையாள டாப் நடிகரும், நஸ்ரியாவின் கணவருமாக ஃபகத் ஃபாசிலுக்கு மலையாளத்தில் மட்டுமின்றி , ‘பேங்களூர் டேஸ்’ படத்திற்கு பிறகு கொஞ்சம் அதிகமாகவே தமிழிலும் ரசிர்கள் இருக்கிறார்கள். வித்யாசமான படம் , கணமான பாத்திரங்களில் மட்டுமே அதிகம் நடிக்கும் ஃபகத் அடுத்து மலையாளத்தில் ‘விர்ஜின்’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த பெயரே கொஞ்சம் ஏடாகூடமான பெயர் என்பதால் மலையாள சினிமா உலகில் எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ‘பார்வாதி’ நடிக்க இருக்கிறார். ‘மரியான்’, பூ’, ‘உத்தம வில்லன் ‘ என தமிழ் மக்களுக்கும் பார்வதி நல்ல பரிட்சயம். 

இப்போது ‘பேங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவரும் பார்வதி கூடிய விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைய இருக்கிறார். இந்த படத்தை மலையானத்தின் பிரபல எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்கள் தெரியவரும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்