தெலுங்கு இயக்குநர்களுடன் அடுத்தடுத்து படங்களில் இணையும் சூர்யா? | Surya join Hands With another Block Buster Telugu Director?

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (15/07/2015)

கடைசி தொடர்பு:13:11 (15/07/2015)

தெலுங்கு இயக்குநர்களுடன் அடுத்தடுத்து படங்களில் இணையும் சூர்யா?

 ’மாஸ்’ படத்தையடுத்து தொடர்ந்து ‘24’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் நாயகி சமந்தா. தெலுங்கில் நாகார்ஜுன், நாக சைதன்யா, சமந்தா, ஸ்ரேயா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘மனம்’. இந்த படத்தின் இயக்குநர்தான் விக்ரம் குமார் தான் சூர்யாவின் ‘24’ படத்தை இயக்கி வருகிறார். 

இந்த படத்தின் நிறைவையடுத்து ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 3’ படத்தில் நடிக்க இருக்கும் சூர்யா அதைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து இப்போது  த்ரிவிக்ரமுடன் புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

த்ரிவிக்ரம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘அத்தாரிண்டிக்கி தாரெடி’ மற்றும் அல்லு அர்ஜுனின் ‘S/O சத்யமூர்த்தி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் வரவேற்புகள் அதிகம் இருப்பதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்