'பாகுபலி2' படத்துக்கு பிறகே புதிய படம் .... பிரபாஸ் முடிவு! | New Films will be After Baahubali 2 Only... Prabhas Decided!

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (16/07/2015)

கடைசி தொடர்பு:15:18 (16/07/2015)

'பாகுபலி2' படத்துக்கு பிறகே புதிய படம் .... பிரபாஸ் முடிவு!

 ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘பாகுபலி’ படத்திற்கு இந்திய அளவில் வரவேற்புகள் கிடைத்துவருவது நாமறிந்ததே. தற்போது இந்த படத்திற்கு ‘பாகுபலி 2’ படத்திற்கும் இடையில் அடுத்த படத்தில் நடித்துவிடலாம் என முடிவு எடுத்த பிரபாஸ் தெலுங்கின் ஹிட் படம் ‘ரன் ராஜா ரன்’ படத்தின் இயக்குநர் சுஜீத்திடம் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம். 

இந்நிலையில் ராஜமௌலி ‘பாகுபலி 2 ‘ படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடித்துவிட்டாராம். மேலும் அடுத்த வருட ஆரம்பத்திலேயே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம். மேலும் பிரபாஸிடம் புது படம் எதிலும் ஒப்பந்தமாக வேண்டாம் எனக் கூற பிரபாஸும் அதற்கு ஒப்புகொண்டுள்ளாராம். 

எனவே தற்போது பிராஸ், சுஜீத் இணைய உள்ள புதிய படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி 2’ படத்துக்கு பிறகுதான் அடுத்த படம் என சொல்லிவிட்டார் பிரபாஸ். மேலும் தற்போது ‘பாகுபலி 2’ படத்தின் டீஸர் இப்போதே திரையரங்குகளில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கின் டாப் நடிகரான பிரபாஸ் இயக்குநரின் வேண்டுகோளுக்கு இணங்கி படத்தை நிறுத்தியது தெலுங்கு சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்