யானை மேல் சவாரியா? அடுத்தடுத்து புகார்களில் சிக்கும் நஸ்ரியா!

மலையாள நடிகைகளான நஸ்ரியா மற்றும் ரஞ்சனி ஹரிதாஸ் இருவரும் கேரள வனத்துறையினருக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் இருவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

திருச்சூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் பிராணிகள் நல வாரியத்திடம்  அளித்துள்ள புகாரில், “ 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐகோர்டு அளித்த உத்தரவுப் படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இல்லாமல் யானைகள் மேல் சவாரி செய்வது குற்றம். ஆனால் இதையும் மீறி எந்த வித அனுமதியும் இன்றி நடிகைகளான நஸ்ரியாவும், ரஞ்சனி ஹரிதாஸும் யானை மீது சவாரி செய்துள்ளனர்

எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த குற்றத்திற்கு துணைபோன வனத்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மனு அளித்துள்ளார்.

இந்த சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறுதியான ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் இவர்களுக்கு தண்டனை உறுதி என்பதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் நஸ்ரியா.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!