திருட்டு வி.சி.டிக்கு முடிவு: மலையாள சினிமா உலகின் புது டெக்னிக்!

இனி படம் வெளியாகும் போதே இணையத்திலும் நல்ல தரத்தில் படத்தைக் காணும்படியான வசதியை இன்று மலையாள சினிமா உலகம் துவக்கியுள்ளது. தமிழ் , தெலுங்கு, இந்தி என மொழிவாரியாக சினிமாக்களின் ஒரே பிரச்னை இந்த திருட்டு விசிடிக்கள். 

என்ன போராட்டம் நடத்தினாலும், புரட்சி செய்தாலும் , கொஞ்ச நாட்கள் அமைதியாக இருக்கும் பின்னர் திரும்ப புதுப்பட வியாபாரம் கலைக்கட்டத் துவங்கிவிடும். இது போதாதென இணையத்திலேயே ஆன்லைனில் புதுப் படங்களை பார்ப்பதற்கென தனி வெப்சைட்டுகள் வேறு . 

இதை இனியும் பொருத்துக் கொள்ள இயலாது இனி நாங்களே படம் வெளியாகும் அதே நாளில் இணையத்திலும் வெளியிடுகிறோம் என மலையாள சினிமா தரப்பு முடிவு செய்து, ஜிங்கோஸ் லேப்ஸ் என்ற நிறுவனத்துடன் சினிமா துறையினரும் இணைந்து reelmonk.com என்ற இணையத்தை துவக்கியுள்ளனர்.

ஒரு புதிய படத்தைக் காண ரூ.180 செலவு செய்து பதிவிறக்கம் செய்து எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இதை ஏற்கனவே ஹாலிவுட் பட உலகினர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியில் கொஞ்சம் பழைய படங்களை சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களே விற்பனை செய்வது நாமறிந்ததே. மேலும் நம்மூரில் C2H என்ற திட்டத்தில் டிவிடிக்களை 50 ரூபாய் செலவில் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை சேரன் துவக்கினார். எனினும் இது தயாரிப்பு அளவில் கொஞ்சம் லாபமில்லாத திட்டமாகவே பார்க்கப்படுகிறது. 

இப்போது மலையாள உலகில் துவங்கியுள்ள இந்த திட்டத்திற்கு சினிமா துறையினரும், ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இது பயனளிக்கும் எனக் கூறுகிறார்கள்.  மேலும் இந்த பைரேட்ஸ்களால் மலையாள சினிமா சமீபத்தில் ’பிரேமம்’ படத்தின் சென்சார் காப்பியே இணையத்தில் வெளியானதில் அதிர்ச்சியில் இருப்பதால் இந்த திட்டத்திற்கு அதீத வரவேற்புகளை கொடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!