சர்ச்சைக் கதையை இயக்கவிருக்கிறார் ‘மல்லிகா’! | Malliga becomes Director In malayalam!

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (22/07/2015)

கடைசி தொடர்பு:15:30 (22/07/2015)

சர்ச்சைக் கதையை இயக்கவிருக்கிறார் ‘மல்லிகா’!

சேரனின் ‘ஆட்டொகிராஃப்’  படம் மூலம் அறிமுகமான நடிகை மல்லிகா. தொடர்ந்து விஜய்யின் திருப்பாச்சி, அஜித்தின் திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். எனினும் கவர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்னும் கொள்கையுடன் இருந்ததாலேயே மல்லிகாவுக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. 

மலையாள சினிமா உலகில் துணை இயக்குநராக பணியாற்ற துவங்கியவர் தற்போது இயக்குநராக தனது முதல் படத்தை இயக்க உள்ளார். சினிமாவில் நடிகைகள் உடலளவிலும், மனதளவிலும் எந்த அளவிற்கு காயப்படுத்தப்படுகிறார்கள் என்பதே படத்தின் கதையாம். 

இவை தவிர்த்து தற்போது இணையங்களிலும் வீடியோக்கள், புகைப்படங்கள் என நடிகைகள் எப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே படமாக உருவாக உள்ள இந்த படத்தில் நாயகியாக பாவனா நடிக்கிறார். படத்திற்கு ‘பழனியிலே கலகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close