தமிழ்நாட்டிலும் வசூலை அள்ள நினைக்கும் மகேஷ்பாபு | mahesh babu wants to earn in Tamil Nadu!

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (23/07/2015)

கடைசி தொடர்பு:17:34 (23/07/2015)

தமிழ்நாட்டிலும் வசூலை அள்ள நினைக்கும் மகேஷ்பாபு

 தெலுங்கின் முன்னணிநடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு நடிப்பில் ஆகஸ்ட் ஏழாம்தேதி வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. அந்தப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இந்தப்படத்தைத் தெலுங்கில் வெளியாகும் அதேநாளில் தமிழிலும் குரல்மாற்றம் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

 மகேஷ்பாபுவின் சில படங்கள் ஏற்கெனவே இங்கு டப் செய்து வெளியிடப்பட்டிருப்பதால் அவரை எல்லோருக்கும் தெரியும் என்பதோடு நாயகியாக ஸ்ருதிஹாசன் இருப்பது இன்னும் பலமாக அமைந்திருக்கிறது. சுகன்யா, ஆம்னி, அங்கனாராய் ஆகிய நடிகைகள் நடித்திருப்பதோடு பூர்ணா ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறாராம். அதோடு படத்துக்கு இசையமைத்திருப்பதும் தமிழ்ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான தேவிஸ்ரீபிரசாத் என்பதும் படத்துக்குப் பலமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

 

முன்னணிதமிழ்நடிகர்கள் தங்கள் படங்களை தமிழில் வெளியாகும் அதேநேரத்தில் ஆந்திராவிலும் வெளியிட்டு அந்தச்சந்தையிலும் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மகேஷ்பாபு போன்ற நாயகர்கள் தமிழிலும் ஒரு வசூலைப் பார்த்துவிடலாம் என்று முடிவுசெய்து படத்தை வெளியிடுகிறார்கள் போலும்.          

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close