மகேஷ் பாபு ஓட்டிய சைக்கிள் 3 லட்சம்!

இப்பொதைய நிலைக்கு ஒரு மாஸ் ஹீரோவின் டீஸர் வெளியாகிறது என்றால் கண்கொட்டாமல் அவரது ரசிகர்கள் காத்திருப்பது தனது ஹீரோ எப்படி பில்டப்பில் வரப்போகிறார் என்பதைக் காணத்தான். அப்படித்தான் இப்போதுவரை அனைத்து பெரிய ஹீரோக்களின் டீஸர்களும் வெளியாகிவருகிறது. 

சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின்’ ஸ்ரீமந்துடு’ பட டீஸர் வெளியானது. அதில் யாரும் எதிர்பாரா வண்ணம் மகேஷ் பாபு சைக்கிளில் அப்பாவியாக வந்தார். ரசிகர்கள் மட்டுமல்ல சினிமா துறையினர் பலரும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. 

என்ன மாஸ் ஹீரோ இப்படி சைக்கிளில் வருகிறாரே எனப் போட்டி ஹீரோக்களின் ரசிகர்கள் கூட கிண்டலடித்து மீம்ஸ்களை வெளியிட்டனர். ஆனால்  சும்மா இல்லை, மகேஷ் பாபு ஓட்டி வந்த சைக்கிளின் விலை மூன்றரை லட்சம் என அதிர்ச்சி தருகிறார்கள் படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள்.

அது ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள். 20 கியர்கள் அந்த சைக்கிளில் உள்ளனவாம். உயரத்தை சரி செய்துகொள்ளும் வசதியும் உள்ள இந்த சைக்கிள் ரேஸ் பிரியர்களுக்கான வண்டியாம்.  சரியான பழக்கமின்றி பயன்படுத்தினால் மண்ணைக் கவ்வ வேண்டிவரும் என்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம்.அப்போ மாஸ் தான் ஒத்துக்கறோம் பாஸ்! 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!