பாகுபலி ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது - மோடி பிரபாஸுக்கு புகழாரம்! | Prabhas Met Modi!

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (27/07/2015)

கடைசி தொடர்பு:13:11 (27/07/2015)

பாகுபலி ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது - மோடி பிரபாஸுக்கு புகழாரம்!

 பாகுபலி படத்தின் நாயகனும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பிரபாஸ் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார். டெல்லி ரேஸ்கோர்ஸ் அருகில் இருக்கும் நரேந்திர மோடியின் வீட்டில் தனது மாமாவும் பாஜக உறுப்பினருமான கிருஷ்ணம் ராஜுவுடன் பிரபாஸ் சந்தித்ததையடுத்து சினிமா வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளன. 

மோடியை சந்தித்த பிரபாஸ் மெகா ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி’ படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மோடியும் கண்டிப்பாக பார்க்கிறேன். சமூக வலைகள் ரசிகர்கள் என ‘பாகுபலி’ பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.இப்போது நான் கொஞ்சம் வேலை நிமித்தம் காரணமாக நேரமில்லாமல் இருக்கிறேன். கண்டிப்பாக நேரம் கிடைக்கையில் படத்தை பார்ப்பேன் எனக் கூறியுள்ளார் மோடி. 

இதனையடுத்து 'பாகுபலி’ பிரபாஸை சந்தித்தேன் என நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் இதே போல் சல்மான் கானும் சென்ற வருடம் மோடியுடன் இணைந்து பட்டம் விடும் நிகழ்வுகளில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

பிரபாஸ் நரேந்திர மோடியை சந்தித்ததில் அவர் அரசியலுக்கு வரும் திட்டத்தில் ஏதும் இருக்கிறாரோ என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது மாமா கிருஷ்ணம் ராஜுவும் தெலுங்கு பாஜகாவின் தலைவர் என்பதால் பிரபாஸ் அரசியலில் குதித்தாலும் ஆச்சர்யம் இல்லை எனக் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close