மோகன் லால் அமைத்த பாதையில் தான் நான் நடித்தேன் : கமல் புகழாரம்!

 ஜீது ஜோஸப் இயக்கத்தில் கமல், கௌதமி, நிவேதா தாம்ஸ், ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பாபநாசம்’. நடுத்தர குடும்பம் ஒன்றில் நடக்கும் விபரீதமும் அதைச் சார்ந்த கதையுமாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படம்.

மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷயம்’ படத்தின் ரீமேக்கான இந்தப் படம் ஒரிஜினல் ’த்ரிஷயம்’ படத்தைக் காட்டிலும் வசூலிலும் , விமர்சனத்திலும் பாராட்டுகளை பெற்றது. மேலும் மெகா ஹிட் ‘பாகுபலி’ வந்த போது கூட ‘பாபநாசம்’ படத்தை அசைக்க முடியாத அளவிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 

இந்நிலையில் கமல் இந்த வெற்றி மோகன்லாலுக்கு உரியது. அவர் அந்த படத்தில் ஏற்று நடித்த பாத்திரத்தைத் தான் நான் பின்பற்றி நடித்தேன். இந்த கேரக்டருக்கு சரியான வடிவம் கொடுத்த பெருமை மோகன்லாலுக்குத் தான் உரியது எனக் கூறியுள்ளார். 

தான் மிகப்பெரிய நடிகர் என பெயர் பெற்றபோதும் இன்னொரு டாப் நடிகரின் நடிப்பைத் தான் பின்பற்றியதாக கூற எப்பேற்பட்ட நடிகரும் கொஞ்சம் தயக்கம் காட்டத்தான் செய்வார்கள், அப்படியிருக்க கமல் மீண்டும் கலையை மதிப்பவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்றே கூறவேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!