முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு? | Mahes babu Next Movie Sri manthudu!

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (30/07/2015)

கடைசி தொடர்பு:16:23 (30/07/2015)

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு?

தெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. பல இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டு இறுதியில் கோரட்டலா சிவா இயக்கத்தில்  நடித்திருக்கிறார்.

குறைந்தது 100 கோடியாவது பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துவிடவேண்டும் என்பதற்காக தமிழில் செல்வந்தன் என்ற பெயரிலும் டப் ஆகி ஸ்ரீமந்துடு வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் கோடீஸ்வரனாக நடித்திருக்கும் மகேஷ்பாபு, தன்னுடைய சொந்த கிராமத்தை தத்து எடுத்து பல நலத்திட்ட உதவிகள் செய்வது போல் நடித்துள்ளாராம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது.

பொழுதுபோக்குடன் சமுக கருத்தையும் முன்வைக்கும் படமாக ஸ்ரீமந்துடு தயாராகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கான புரோமோஷனில் பிஸியாக இருந்தவர், “ தமிழில் படம் நடிக்க தயாராகவிருப்பதாகவும், தமிழில் டாப் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியிடும் வகையில் ஒரு படம் நடிக்கத் தயாராகவிருப்பதாகவும் கூறினார். மேலும் கன்னட படங்களில் நடிப்பேன். ஆனால் இந்திப் படங்களில் நடிக்க தயாராகவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close