வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (01/08/2015)

கடைசி தொடர்பு:17:43 (01/08/2015)

பிரபல இயக்குநருக்குத் திருமணம்!

நிவின் பாலி, நஸ்ரியா, பாபிசிம்ஹா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த நேரம் படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

நிவின் பாலியை வைத்தே தன்னுடைய இரண்டாவது படமாக பிரேமம் என்கிற மலையாளப் படத்தை இயக்கி வசூல் சாதனையைப் படைத்தார். சமீபத்தில் கூட ரஜினிக்கு அடுத்த படத்தை இயக்க கேட்டதாகவும், இவர் நோ சொன்னதாகவும் பல செய்திகள் பரவின.  தன்னுடைய அடுத்த படத்தைப் படத்தைப் பற்றி ப்ளான் செய்வார் என்று எதிர்பார்த்தால், சீக்கிரத்தில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

அல்போன்ஸ் புத்திரன் கொச்சியை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்வின் ஆன்டணியின் மகள் அலினா மேரியாவுடன் திருமணம் செய்யவிருக்கிறார்.  இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்வு வருகிற 17ம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து 22ம் தேதி திருமணமும் நடக்கவிருக்கிறது. தற்பொழுது அலினா மேரி சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்