மகேஷ்பாபுவுடன் முத்தக் காட்சியில் ஸ்ருதிஹாசன்? | SriManthudu Movie with ShruthiHassan

வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (04/08/2015)

கடைசி தொடர்பு:16:00 (04/08/2015)

மகேஷ்பாபுவுடன் முத்தக் காட்சியில் ஸ்ருதிஹாசன்?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. அதே நாளில்  செல்வந்தன் என்றப் பெயரில் டப்பிங் செய்து தமிழிலும் வெளியாகவிருக்கிறது.

சென்சார் பார்வைக்கு இன்று சென்றது ஸ்ரீமந்துடு.  யு/எ சான்றிதழ் கிடைத்திருக்கிறதாம். இன்று அந்தப்படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. மைத்ரி மூவிஸ் நிறுவனத்துடன் மகேஷ்பாபு இணைந்து தயாரிக்க கோரட்டல சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

மகேஷ்பாபுவின் ஆகடு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ருதிஹாசன் முதன் முறையாக  மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில்  ஸ்ருதி, மகேஷ்பாபு இருவருக்கும் முத்தக் காட்சிகள் நடித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. பாலிவுட், டோலிவுட் என்று கவர்ச்சியில் வரையறை வகுத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முத்தக் காட்சியில் நடித்துள்ளாரா என்று ரசிகர்கள் இணையத்தில் ட்விட் செய்துவருகின்றனர். இதற்கெல்லாம் விடை வரும் 7ம் தேதி படம் வெளியாகும் போது தெரியவரும். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close