ராஜமௌலியின் வாழ்நாள் கனவு!

இந்தியாவின் டாப் இயக்குநர் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்த ராஜமௌலியின் கனவுப் படம் பிரம்மாண்ட ‘பாகுபலி’ கூட இல்லையாம். அவரது கனவு வாழ்நாள் சாதனை என சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி எடுத்த ஒரு பேட்டியில் போது கூறியுள்ளார். 

மகாபாராதம் இதிகாசத்தை படமாக எடுப்பதுதான் ராஜமௌலியின் கனவாம். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘ மகாபாரதம்’ இதிகாசத்தை படமாக எடுப்பது  அவ்வளவு சுலபமல்ல. மூன்று மணி நேரத்தில் ஒரு படமாக எடுத்து முடிவு கொடுப்பதோ, அல்லது மூன்று மணி நேரம் இரண்டு படங்களாகவோ என மகாபாரதத்தை எடுத்துவிட முடியாது.

மகாபாரதத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு படமாக எடுக்கப்பட வேண்டியவை. கடைசியாக ஒவ்வொரு கேரக்டரும் கடவுள் கிருஷ்ணனை மையப் படுத்தி சொல்லப்பட்டிருக்கும் இந்த இதிகாசத்தை தெலுங்கில் படமாக எடுப்பதே எனது கனவு ‘ என அந்த பேட்டியில் கூறியுள்ளார் ராஜமௌலி.

இதை படமாக எடுத்தால் உலக படங்களின் மத்தியில் நாம் பேசப்படுவோம். அந்த அளவிற்கு சிறப்பான கதாபாத்திரங்களும்,அவைகளின் முக்கியத்துவமும் இருக்கின்றன. ஆனால் அது ஒரு கடல் என நெகிழ்ந்துள்ளார் ராஜமௌலி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!