வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (06/08/2015)

கடைசி தொடர்பு:15:24 (06/08/2015)

சுதீப், நித்யா மேனன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமாரின் புது படம்!

 ’லிங்கா’ படம் காரணமாக சுதீப் நடிப்பில் உருவாக இருந்த கன்னடப் படம் ‘கொடிகொப்பா 2’ படத்தை தள்ளிப்போட்டார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். தற்போது அந்த படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழாவில் இதை நினைவுகூர்ந்து சுதீப்புக்கு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஆரம்பிக்கப்பட உள்ள இந்த படத்தின் நாயகியாக நித்யா மேனன் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என தென்னிந்தியாவின் எல்லா மொழிகளிலும் கலக்கி வரும் நித்யா மேனன் கன்னடத்தில் நடிக்க இருக்கும் 5வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்திற்கு இசை இமான். நித்யாமேனன் தற்சமயம் மும்பையில் சூர்யாவின் ‘24’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முடிவுக்கு பிறகு சுதீப், கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘கொடிகொப்பா 2’ படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. மேலும் இமான் இசையமைக்க உள்ள முதல் கன்னடப்படமும் இதுதான் என்பது கூடுதல் செய்தி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்