பாகுபலி பாணியைப் பின்பற்றும் முருகதாஸ் | Murugadoss Produced new movie In tamil!

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (13/08/2015)

கடைசி தொடர்பு:12:04 (13/08/2015)

பாகுபலி பாணியைப் பின்பற்றும் முருகதாஸ்

கத்தி படத்திற்குப் பிறகு இந்தியில் சோனாக்‌ஷி சின்ஹாவை  வைத்து முருகதாஸ் இயக்கிவரும் படம் அகிரா. இப்படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளார் முருகதாஸ். 

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூவுடன் இணைந்து கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் புதிய படம் ஒன்றை முருகதாஸ் தயாரிக்கவுள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளது.  இந்தப் படத்தின் கதையை எழுதி, தமிழ்ப் பதிப்பை முருகதாஸ் தயாரிக்கவுள்ளார். தெலுங்கு பதிப்பை தில் ராஜூ தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிக்க முன்னனி தெலுங்கு நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. முன்னதாக இது கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதைப் படக்குழு மறுத்துவிட்டது.

முன்னணி இயக்குநரின் இயக்கத்திலோ அல்லது ஸ்டார் நடிகர் நடித்தாலோ உடனே தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிவிடுகிறது. அல்லது ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் படமாக்கப்படுவது புது ட்ரெண்டாகிவருகிறது. பாகுபலி, ஸ்ரீமந்துடு பாணியில் முருகதாஸின் படமும் இணைந்துவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close