பிரியதர்ஷனைப் பிரிந்த பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் லிஸி! | Lissy Come Back to Film?

வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (18/08/2015)

கடைசி தொடர்பு:14:24 (18/08/2015)

பிரியதர்ஷனைப் பிரிந்த பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் லிஸி!

 லிஸியை நியாபகம் இருக்கிறதா. ‘விக்ரம்’ படத்தில் ராங்கி பொண்ணாக மேலும் விஞ்ஞானியாக நடித்திருப்பார். சுமார் 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்த பிரபலமான மலையாள நடிகை. தமிழில் ‘விக்ரம்’, ’ஆனந்த ஆராதனை’, ‘ மனசுக்குள் மத்தாப்பு’ உள்ளிட்ட மிகச்சில படங்களில் நடித்தார். 

தெலுங்கிலும் சில படங்களில் தலை காட்டியுள்ளவர் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருக்கிறார். இட்வெலக்கு ஷேஷம்’ என்னும் மலையாள படத்தில் ஹோமியோபதி மருத்துவராக நடிக்க இருக்கிறார் லிஸி. திலக் ராஜ் என்னும் புதுமுக இயக்குநர் இயக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்புகள் எர்ணாகுளத்தில் துவங்கப்பட உள்ளது. 

படத்தின் மற்ற நடிகர்கள்,. மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.சென்ற வருடம் கணவர் ப்ரியதர்ஷனுடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு லிஸி மீண்டும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close