வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (19/08/2015)

கடைசி தொடர்பு:16:00 (19/08/2015)

மீண்டும் நடிக்க வருகிறார் நஸ்ரியா!

’நேரம்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸீம்,. தொடர்ச்சியாக ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ’வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா சலாலாஹ் மொபைல்ஸ், பேங்களூர் டேய்ஸ், ஓம் ஷாந்தி ஓஷன்னா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

நடித்த படங்கள் மிகிச் சில படங்கள் எனினும் நடிப்பாலும், அழகிய தோற்றமும் இவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமானவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை ஆகஸ்ட் 21ம் தேதி 2014ல் திருமணம் புரிந்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டார். 

பலரும் ஒரு நல்ல நடிகை நடிப்பை விட்டுவிட்டாரே என்ற வருத்தம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நஸ்ரியா மீண்டும் நடிக்க இருக்கிறார். அதுவும் ஃபகத் ஃபாசில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். 

தயாரிப்பாளர், மற்றும் இயக்குநராக கேரளா கஃபே, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூரு டேய்ஸ், பிரேமம் உள்ளிட்ட படங்களை தயாரித்த அன்வர் ரஷீத் இயக்கத்தில் தான் புதிய படத்தில் இருவரும் நடிக்க இருக்கிறார்கள். நஸ்ரியாவின் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி இனிப்பான செய்தி என்றே கூறவேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்