தென்னிந்தியாவிற்கு பெருமை சேர்த்த செம்மீன் படத்துக்கு வயது 50 | Chemmeen Movie'S age is 50!

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (21/08/2015)

கடைசி தொடர்பு:17:36 (24/08/2015)

தென்னிந்தியாவிற்கு பெருமை சேர்த்த செம்மீன் படத்துக்கு வயது 50

 "ந்திய சினிமாவில் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்றைக்கும் போற்றப்படும் திரைக் காவியமான செம்மீன் திரைப்படம் வெளியாகி, இன்றோடு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன". வயசானாலும், உன் ஸ்டைலும், அழகும் குறையாது என்பது போல, 1965-ல் வெளியான செம்மீன் திரைப்படம், இன்றும் கேரள ரசிகர்களின் ஆதரவோடு பேசப்படுகிறது. இந்த திரைப்படத்தின் கதை பெரும்பாலும் எல்லா ரசிகர்களுக்கும் தெரியும். இருப்பினும் செம்மீன் திரைப்படத்தின், சின்ன பிளாஸ் பேக் கதையைப் பார்ப்போம்.

"ஒரு ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த கதையின் நாயகியான கருத்தம்மா, ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை சூழ்நிலையில் வாழ ஆசைப்படுகிறாள். அவளது ஊரைச் சேர்ந்த, முஸ்லீம் இளைஞனான பரிக்குட்டியுடன் காதல் கொண்டு, இரவு நேரக் கடற்கரை ஓசையில் இருவரின் காதலும் மலர்கிறது. ஆனால், நாயகியின் தந்தையான செம்மங்குஞ்சு, ஒரு ஏழையான பழனிக்கு, அவளை திருமணம் செய்து வைக்கிறார். அழுகையுடன் புதுவாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்கிறாள். ஒருகட்டத்தில், கவலையுடன் புது வாழ்க்கையைக் கழிக்க முடியாமல் நாயகியும், காதலனும் தங்களின் காதல் பயணம் ஆரம்பித்த கடலிலேயே, தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்".

"செம்மீன் திரைப்படம் தேசிய அளவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதோடு, தேசிய விருது வென்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற பெருமையையும் பெற்றது". இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவின, சலீல் சவுத்ரியின் இசை. இந்த திரைப்படத்தில் வரும், 'கடலினக்கரை போனோரே' பாடலானது இன்றும் பலரது விருப்பமான பாடலாக உள்ளது. 'இந்த திரைப்படத்தில் கதை நாயகனாக மது மற்றும் கதை நாயகியாக ஷீலாவும் நடித்திருந்தனர்'.

குறிப்பாக பிரேம் நஸீருக்கு, காதலியாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும், அம்மாவாகவும் கூட நடித்திருக்கிறார், ஷீலா. மேலும், "செம்மீன் திரைப்படம் தேசிய அளவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. இந்த திரைப்படத்தி இயக்கிய பாமு காரியாட்டுவையே, ஷீலா திருமணம் செய்து கொண்டார்". குறிப்பாக, இந்த திரைப்படத்தின் நாயகி செம்மீன் ஷீலா, எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பல்வேறு திறமைகளைக் கொண்டவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய "கங்கையில் கரைந்தாள்" என்ற கட்டுரை பெரிய வரவேற்பைப் பெற்றது.

-கு.ஆனந்தராஜ் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close