பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா! | Premam Telugu Remake...On Floor With Nagachaidhanya!

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (22/08/2015)

கடைசி தொடர்பு:11:31 (22/08/2015)

பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா!

மலையாளத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டீன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘பிரேமம்’. நம்மூரின் அட்டக்கத்தி படத்தின் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்ட வகை ரீமேக் தான் இந்த ‘பிரேமம்’. படம் வெளியாகி வசூல், விமர்சனம் என ப்ளாக்பஸ்டரானது. 

இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். நாக சைதன்யா நாயகனாக நடிக்க இப்படத்தை த்ரில்லர் இயக்குநர் கார்த்திகேயன் இயக்க உள்ளார். மலையாளத்தில் இப்படத்தை அல்போன்ஸ் புதரென் இயக்கினார். சமீபத்தில் ரஜினியே படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தெலுங்கில் ரீமேக் ஆகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. 2016ம் ஆண்டு படமாக இப்படம் வெளியாகலாம் என தெரிகிறது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. நாக சைதன்யா தற்சமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தமிழில் நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close