தரகர்களிடம் ஏமாந்த நடிகையின் கண்ணீர்க்கதை

மலையாள நடிகை நீத்து கிருஷ்ணா போலி ஆவணங்கள் சமர்பித்து விசா கேட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவில்லா ஊரைச் சேர்ந்த நீத்து கிருஷ்ணா என்ற மலையாள நடிகை தன் நண்பருடன் இணைந்து பொய்யான திருமணச் சான்றுகளை கொடுத்து அமெரிக்க செல்லவேண்டி சென்னை அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அவர் கொடுத்த சான்றுகள் பொய்யெனத் தெரிந்ததில் போலீஸ் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் நடக்கும் திருமண விழாவில், நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி நடிகையும் அவரது நண்பரும் விசா கேட்டுள்ளார்கள். மேலும் தரகர் கும்பலிடம் 2 லட்சம் பணம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா கூட்டிப்போவது  எங்கள் பொறுப்பு என்று நடிகைக்கு தரகர்கள் உத்தரவாதம் கொடுத்ததை நம்பி நடிகை இப்படி மாட்டிக்கொண்டுவிட்டார் என்று சொல்லப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!