சமந்தாவின் செல்வாக்கு சரிகிறதா?

 தமிழில் ’10என்றதுக்குள்ள’ ,விஜய்யின் 59வது படம், தனுஷுடன் அடுத்தடுத்து இருபடங்கள், 24, அர்ஜுன், திவ்யா மற்றும் கார்த்திக் ,வட சென்னை என தமிழில் செம பிசியாக நடித்துவரும் சமந்தாவிற்கு தெலுங்கை பொருத்தமட்டில் இறங்குமுகமாக மாறியுள்ளது. 

ஸ்ருதி ஹாசன் , காஜல் அகர்வால் , தமன்னா, ஏன் சமீபத்திய வரவான ரகுல் ப்ரீத் சிங் கூட தெலுங்கின் டாப் நடிகர்களுடன் ஜோடி சேரும் நிலையில் மகேஷ் பாபுவின் அடுத்தபடமான ‘பிரம்மோத்சவம்’ படத்திலிருந்து சமந்தா நீக்கப்பட்டு ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். 

காஜல் அகர்வால்,. பிரணிதா ஏற்கனவே தேர்வான இப்படத்தில் இன்னொரு நாயகியாக தேர்வானவர் சமந்தா இப்போது திடீரென ரகுல் ப்ரீத் சிங் அந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மகேஷ் பாபுவே சமந்தா வேண்டாம் அவருக்கு பதில் வேறு யாரையேனும் தேர்வு செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டதாக தெலுங்கு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

மேலும் இதே பாணீயில் தான் ராம் சரணின் ‘ஆர்சி9’ படத்திலும் சமந்தா ஒப்பந்தமாகி ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாய்ப்பு சென்றது குறிப்பிடத்தக்கது.தமிழில் நயன்தாராவின் வாய்ப்புகளை அள்ளிக்கொண்ட சமந்தா தெலுங்கில் கொஞ்சம் தடுமாறத் துவங்கியுள்ளார். மூன்று நாயகிகளுடன் பக்கா கலர்ஃபுல் தெலுங்கு படமாக உருவாக இருக்கிறது ‘பிரம்மோத்சவம்’. இந்தப் படமும் தமிழில் டப்பாகி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!