ஆஷா சரத்தைத் தொடர்ந்து ஆபாச பட விவகாரத்தில் ’பிரேமம்’ அனுபமா!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் பிரேமம். நிவின் பாலி ஹீரோவாக நடித்த இப்படத்தின் ஒரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன், நடித்திருப்பார். இவர் தவிர்த்து சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், உள்ளிட்டோரும் நாயகிகளாக நடித்திருப்பார்கள்.

நெட்டில் பரவி வரும் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் பிரச்னையில் தற்போது அனுபமா பரமேஸ்வரனும் சிக்கியுள்ளார். இவரது புகைப்படத்தையும் இணைய விஷமிகள் மார்பிங் செய்து ஆபாச பட லிஸ்டில் நெட்டில் விட்டுள்ளனர்.

இதனையடுத்து இதை அப்படியே விட்டுவிடப்போவதில்லை. ஆஷா சரத் தனக்கு நேர்ந்த பிரச்னையை எப்படி போலீஸ் துணைக் கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாரோ அதே வழியைத் தானும் பின்பற்ற போவதாக கோபத்துடன் பேசியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை யாரும் மேற்கொண்டு பரப்ப வேண்டாம். குற்றவாளிகள் தப்பிவிடக் கூடும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!