தெலுங்கு பிரேமம் நாயகியானார் பரினீதி சோப்ரா

 மலையாள சினிமா உலகின் சமீபத்திய ட்ரெண்ட் செட் படமாக மெகா ஹிட்டான படம் ‘பிரேமம். ‘நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அல்போன்ஸ் புதரென் இயக்கத்தில் வெளியான படம். 

படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படம் தற்போது வேறு சில மொழிகளில் ரீமேக்காகும் நிலை உருவாகியுள்ளது. தெலுங்கில் ரீமேக்காக உள்ள இப்படத்தில் நாகார்ஜுனின் மகன் நாகசைதன்யா நடிக்க இருக்கிறார். மேலும் இவர் கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதும் நாமறிந்ததே. 

தெலுங்கில் உருவாக உள்ள பிரேமம் ரீமேக்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி பரினீதி சோப்ரா நடிக்க இருக்கிறார். பிரேமம் படத்தில் மலர் கேரக்டரில் நடித்த சாய் பல்லவி கேரக்டரில் தான் பரினீதி நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப தேர்வுகள் நடந்து வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!