வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (03/09/2015)

கடைசி தொடர்பு:13:43 (03/09/2015)

தன் வீட்டை தானே டிஸைன் செய்த அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுன் நல்ல நடிகர் , தெலுங்கின் முன்னணி நாயகன் என்பது நாமறிந்ததே. ஆனால் அவர் கட்டட உள் வடிவமைப்பாளர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

சமீபத்தில் மும்பையில் சொந்த வீடு ஒன்றை வாங்கியிருக்கும் அல்லு அர்ஜுன் தன் வீட்டைத் தானே டிஸைன் செய்துள்ளார். 

அதிலும் கொஞ்சம் ரீட்ரோ எனப்படும் பழங்காலப் பொருட்கள் அடங்கிய இவரது வேலைப்பாடுகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மொத்த வீட்டின் உள் வேலைப்பாடுகளை வெறும் பத்து நாட்களில் முடித்துள்ளார் அல்லு அர்ஜுன். 

தற்சமயம் பொயாபதி ஸ்ரீனு இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்துவரும் அல்லு அர்ஜுன் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள ‘ருத்ரமாதேவி படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். தனது பிஸியான வேலைகளுக்கு இடையில் தன் வீட்டை தானே வடிவமைத்துள்ளது அவருக்கு தன் வீட்டின் மீது உள்ள ஈடுபாட்டையே காட்டுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்