பாகுபலியை கிண்டல் செய்து திட்டு வாங்கிய தெலுங்கு கோமாளிநடிகர்!

சினிமா பிரியர்களையே கதிகலங்க வைக்கும்  தெலுங்கு நடிகரான பர்னிங் ஸ்டார் சம்பூர்னேஷ்பாபுவின் அடுத்த அட்டாக்  பாகுபலி. அந்தப் படத்தின் போஸ்டரை கிண்டலடித்து இவர் படத்திற்கான மோஷன் போஸ்டரை வெளியிட்டு பீதியை கிளப்பி, அதன்பின்  தலையில் கொட்டும் வாங்கியிருக்கிறார்.

தெலுங்கில், கிருதகலேயம், சிங்கம் 123  உள்ளிட்ட படங்களின் மூலம்  நடித்து அட்ராசிட்டியை கிளப்பிவரும் சம்பு அடுத்து நடிக்கும் படம் கொப்பரிமட்டா. இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை இணையதளத்தில் வெளியிட்டார் சம்பு.

அந்த போஸ்டரில் பாகுபலி படத்தின் கையில் குழந்தை இருப்பது போன்ற போஸ்டரை கிண்டல் செய்து குழந்தைக்குப் பதில் சம்பூர்னேஷ்பாபு படுத்திருப்பது போல தன் படத்திற்கான மோஷன் போஸ்டரை வெளியிட்டார்.

இதைப் பார்த்த ராஜமெளலியின் ரசிகர்கள் சம்புவைத் திட்டித்தீர்த்துவிட்டனராம். சம்புவின் முதல் படமான கிருதகலேயம் படத்தை ராஜமெளலி ட்விட்டரில் பதிவிட்டதால் தான் இவர் பிரபலமடைந்தார். அதை மறந்து சம்பு இப்படிச் செய்தது தவறு என்றும் ராஜமெளலி ரசிகர்கள் சொல்லியிருக்கின்றனர். 

ஆஸ்கார் பரிந்துரை வரை போயிருக்கும்  ஒரு படத்தை நாமே இப்படித் தவறாக சித்தரிக்கக் கூடாது என்று தெலுங்கு திரையுலக ரசிகர்களும் கொந்தளித்தனராம். இதனால் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, ராஜமெளலியிடமும், அவரின் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் சம்பு. ஆனாலும் அந்த மோஷன் போஸ்டர் இன்னும் அப்படியே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!