வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (07/09/2015)

கடைசி தொடர்பு:13:45 (07/09/2015)

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண்!

 இந்தியில் சல்மான்கான் நடிப்பில் தனி ஒருவன் ரீமேக் ஆகலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது தெலுங்கிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார் மோகன் ராஜா. 

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியிலும்,வசூலிலும் நல்ல பாராட்டுகளுடன் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தை இந்தியின் வசூல் நாயகன் சல்மான் கான் சமீபத்தில் பார்த்து மோகன் ராஜாவை பாராட்டியுள்ளார். 

எனவே சல்மான் ஒப்புக்கொண்டால் படத்தை இந்தியில் நானே ரீமேக் செய்ய இருக்கிறேன் எனக் கூறினார் இயக்குநர் மோகன் ராஜா.இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். 

மோகன் ராஜா இயக்க உள்ள இப்படம் அடுத்த வருடம் துவங்கும் எனத் தெரிகிறது. தற்சமயம் புரூஸ் லீ, மற்றும் சிரஞ்சீவியின் 150வது பட வேலைகள் என ராம் சரண் செம பிஸியாக இருக்கிறார். இந்த வேலைகள் முடிந்தவுடன் தனி ஒருவன் ரீமேக்கில் நடிக்க உள்ளார். எனினும் இப்போது முக்கிய கேள்வி தனி ஒருவன் படத்தின் சிறப்பே அரவிந்த் சாமியும் அவரது கேரக்டரும் தான் என்ற நிலையில் அவர் கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாகியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்