மம்முட்டியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொச்சி மாணவர்கள்!

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் கொச்சியின் பிரபல பள்ளியில் ஆயிரம் சிறார்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடந்தது.

இயக்குநர் ஏ.கே.சஞ்சன் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கான படப்பிடிப்பு கொச்சியில் உள்ள பள்ளியில் நடந்துவருகிறது.

அவருக்கே தெரியாமல் அப்பள்ளி மாணாக்கர்கள் மம்முட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்திற்கு வரவும், குழந்தைகளே மம்முட்டியை அழைத்து வந்து கேக் வெட்ட வைத்து பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்த ஏற்பாடுகளைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம் மம்முட்டி.  ஏனெனில் மம்முட்டி தன்னுடைய பிறந்த நாளை என்றும் விமரிசையாகவோ, ஆடம்பரமாகவோ கொண்டாட விரும்பாதவர். அதனால்தான் இந்த அதிர்ச்சி.

 வேலைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், உடனே படப்பிடிப்பை ஆரம்பியுங்கள் என்று  சொன்னதாக படத்தின் இயக்குநர் சஞ்சன் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!