எனக்கு முன்னால் நீங்களெல்லாம் பச்சா, சொல்கிறார் சீனியர் நடிகர் சிரஞ்சீவி!

சீனியர் நடிகரும், அரசியல் பிரமுகருமான சிரஞ்சீவி இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களான ராம் சரண், அல்லு அர்ஜுன், உள்ளிட்ட நடிகர்களை எனக்கு முன்னால் நீங்களெல்லாம் பச்சா எனக் கூறியுள்ளார். 

தனது 150வது படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் சிரஞ்சீவி , புரூஸ்லீ படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடிக்கவும் உள்ளார். இந்நிலையில் இப்போது இருக்கும் நடிகர்கள் எனக்கு சமமாக நடனம் ஆடக் கூட முடியாது. 

ஆஃப்டர் ஆல் பச்சா எனக்கு முன்னால் என கமெண்ட் அடித்துள்ளார். மேலும் ராம் சரணுக்கு இன்னும் சில சினிமா நடிப்பு யுக்திகளும் கற்றுத் தர வேண்டும் எனவும், ராம் சரணும் கேட்கத் தயாராக இருக்கிறார் எனவும் சிரஞ்சீவி கூறியுள்ளார். ராம் சரண் மட்டுமல்ல இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் யாவருக்கும் சினிமா குறித்த ஆலோசனை கூற நான் தயாராக இருக்கிறேன். எனக் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!