சீனாவில் 5000 திரையரங்குகளில் பாகுபலி ரிலீஸ்...ஆச்சர்யத்தில் இந்திய சினிமா! | Rajamouli's Baahubali to release in over 5000 screens in China

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (15/09/2015)

கடைசி தொடர்பு:12:45 (15/09/2015)

சீனாவில் 5000 திரையரங்குகளில் பாகுபலி ரிலீஸ்...ஆச்சர்யத்தில் இந்திய சினிமா!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் ரிலீஸாகி, 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து, இந்திய சினிமா வரலாற்றில் புதிய வரலாறை படைத்த "பாகுபலி", அடுத்து சீனாவிலும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, நடிப்பில் கடந்த ஜூலை 10ம் தேதி ரிலீஸான படம் "பாகுபலி". இந்தியா முழுவதும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம், தற்போது சீனாவில் 5000 திரையரங்குகளில், வருகிற நவம்பர் மாதம், திரையிடப்பட உள்ளது. இந்தியாவின் ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் இதற்கான சர்வதேச உரிமத்தையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் சீனாவின் இ ஸ்டார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் படத்திற்கான சீன மொழி உரிமையை ஆர்கா நிறுவனத்திடம் வாங்கியுள்ளது. சீனாவில் 5000 திரையரங்குகள் என்பது அந்நாட்டின் ஒட்டு மொத்த திரையரங்குகளில் 18% ஆகும். மேலும் சீனப் பதிப்பில் 20 நிமிடக்கதை குறைக்கபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட்டின் "வின்சென்ட் டபாலியன்" இதனை எடிட் செய்துள்ளாராம் .

இவர் “நவ் யூ சீ மி  ,” “டேக்கன் 2” மற்றும் “தி இன்க்ரிடிபில் ஹல்க்" ஆகிய படங்களுக்கு எடிட்டிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சீனாவில் இதே இ ஸ்டார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அமீர்கான் நடித்த பிகே  படத்தினை திரையிட்டது குறிப்பிடதக்கது. இது வரையில் இந்தியாவை தாண்டி அதிக வசூல் சாதனை புரிந்த திரைப்படம் என்ற பெருமையை பிகே தக்கவைத்து கொண்டுள்ளது. தற்போது பாகுபலி இதனை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.மேலும் பாகுபலி சீனாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 5000 திரையரங்குகளில் வெளியாக இருப்பது இந்தியத் திரையுலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

- பிரியாவாசு - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close