நயன்தாராவைக் கோபப்படுத்திய தயாரிப்பாளர்?

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஆரியின் நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் திகில் படம், "மாயா ". இப்படம் நாளை தெலுங்கிலும் ரிலீஸாக இருக்கிறது. தமிழில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், தெலுங்கில் அந்த அளவிற்கு  எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் சி. கல்யாண், ஒரு திகில் சவாலினை வைத்துள்ளார். மயூரி என மாயா படத்திற்குத் தெலுங்கில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மயூரி படத்தைக் காண வருவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு இருக்கிறதாம்.

இப்படத்தை தனியாக, தனது பல்ஸ் மற்றும் ரத்த அழுத்தத்தில் எந்த ஒரு மாற்றமுமின்றி, அதாவது பயம் கொள்ளாமல் படம் முழுவதையும் பார்த்து முடிப்பவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதிலும் இந்த 5 லட்சத்தை நயன்தாரா அவரது கைகளால் வழங்குவார் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு நயன்தாரா தரப்பு என்னை ஏன் கேட்காமல் இப்படி ஒரு அறிவிப்பைக் கொடுத்தீர்கள் என கொஞ்சம் கோபமைடந்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும் தயாரிப்பாளரின் இந்த தில்லான அறிவிப்பால் படத்திற்கு தெலுங்குத் தரப்பிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதே பாணியில் பிரசாந்த், மீனா நடிப்பில் வெளியான ’ஷாக்’ படத்துக்கு படக்குழுவினர் சவால் வைத்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!