கன்னடத்திலும் கால்பதிக்கிறார் சன்னி லியோன்! | Sunny Leone to depute in Kannada Film!

வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (18/09/2015)

கடைசி தொடர்பு:16:24 (18/09/2015)

கன்னடத்திலும் கால்பதிக்கிறார் சன்னி லியோன்!

கன்னட திரையுலகின் இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ், சன்னி லியோனுடன் தான் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். இவர் தற்போது இயக்கிவரும் 'லவ் யு ஆலியா" படத்தில்சன்னி லியோன் சிறப்புத் தோற்றத்தில் தோன்ற உள்ளார்.

இதைப் பற்றிக் கூறுகையில் சன்னி தனிச்சிறந்த தொழில் நெறிமுறைகளைக் கொண்டுள்ளார். முன்னதாக நாங்கள் சன்னி லியோனுக்கென நான்கு நாட்கள் 'காமாக்ஷி ' பாடலுக்காக ஒதுக்கி இருந்தோம், ஆனால் அவருக்கு அத்தனை நாட்கள் தேவைப்படவில்லை, அதற்கு முன்னதாகவே வேலையை முடித்துக்கொடுத்து விட்டார்.மேலும் சன்னி லியோனுக்கென கூடுதலாக இரண்டு காட்சிகளையும் எடுத்துள்ளோம், படப் பிடிப்பின் போது மிக உறுதுணையாகவும், உபயோகமான கருத்துகளும் கூறினார் சன்னி லியோன் என்று இந்திரஜித் லங்கேஷ் கூறியுள்ளார்.

ரவிச்சந்திரன் மற்றும் பூமிகா சாவ்லா நடிக்கும் இப்படத்தில், சன்னியின் கதாபாத்திரம் படத்திற்குக் கூடுதல் விறுவிறுப்பைத் தரும் என்றும் கூறியுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தினை பின்பு ஹிந்தி யில் டப் செய்து வெளியிட உள்ளனர்.

- பிரியாவாசு - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close