பாடகி ராதிகாதிலக் மரணம்! மலையாள திரையுலகம் அஞ்சலி! | It's a sad day Radhika Thilak dies

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (21/09/2015)

கடைசி தொடர்பு:12:47 (21/09/2015)

பாடகி ராதிகாதிலக் மரணம்! மலையாள திரையுலகம் அஞ்சலி!

கேரள மாநிலம் கொச்சி பிள்ளையாவிளையைச் சேர்ந்தவர் ராதிகா திலக் (வயது 45). பிரபல மலையாள சினிமா பின்னணி பாடகி. 1991–ம் ஆண்டு ‘ஒற்றையால் பட்டாளம்’ என்ற மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ராதிகா திலக் 70–க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் பாடியுள்ளார்.

இந்த நிலையில் ராதிகா திலக் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.  அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராதிகா திலக் மரணமடைந்தார். இதைதொடர்ந்து அவரது உடல் கொச்சியில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

ராதிகாதிலக் மரணமடைந்த தகவல் கிடைத்ததும் மலையாள திரையுலகினர் அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பிரபல மலையாளப் பாடகர்கள் எம்.ஜி.ஸ்ரீகுமார், வேணுகோபால் உள்பட பாடகர்களும் ராதிகா திலக் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை பாடகி ராதிகாதிலக் உடல் அடக்கம் நடைபெறுகிறது. ராதிகா திலக்கின் கணவர் கிருஷ்ணா. இவர் தொழில் அதிபராக உள்ளார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அவர் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்