இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகேஷ் பாபு! | Mahesh Babu Gifts Audi Car to Koratala Siva

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (22/09/2015)

கடைசி தொடர்பு:13:16 (22/09/2015)

இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகேஷ் பாபு!

ஸ்ரீமந்துடு படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இயக்குநர் கொரட்டல சிவாவுக்கு ஆடி ஏ6 கார் ஒன்றைப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு. மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஸ்ரீமந்துடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது, குறிப்பாக பாக்ஸ் ஆபிசிலும் படம் வசூலை அள்ளியது. மேலும் இப்படத்தின் வாயிலாக மகேஷ்பாபு பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.இப்படம் நம்மூரிலும் செல்வந்தன் என்ற பெயரில் டப்பாகி வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மகேஷ்பாபு நேற்று இரவு திடீரென இயக்குநர் கொரட்டல சிவாவை தொடர்பு கொண்டு ஆடி ஷோரூமிற்கு வரச் சொல்லி கூறியுள்ளார், என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே வந்த கொரட்டல சிவா மகேஷ்பாபு பரிசளித்த ஆடி காரைப் பார்த்ததும் வாயடைத்து நின்று விட்டாராம்.

வெள்ளை நிற ஆடி கார் மகேஷ்பாபுவின் அன்பையும் அவரது பெருந்தன்மையையும் உணர்த்தியதாக கொரட்டல சிவா நெகிழ்ந்துள்ளார் . இந்த பரிசளிப்பு நிகழ்வில் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கரும் உடன் இருந்துள்ளார். ஸ்ரீமந்துடு படத்திற்கு தயாரிப்பாளர் மகேஷ்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியாவாசு -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close