பாகுபலிக்கு கிடைத்த முதல் விருது!

ராஜமௌலியின் படைப்பான பாகுபலி தனது, பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனக்கான முதல் விருதினை வென்றுள்ளது. NDTV யின் கேட்ஜெட் குரு விருதில், சிறந்த எபக்ட்டுக்கான விருதினை பாகுபலி வென்றுள்ளது. ஜூலை 10, 2015ல் ரிலீஸான இப்படம், அன்று முதல்லே தமிழ், தெலுங்கு, இந்தி என முன்று மொழிகளிலும் மாபெரும் வெற்றியை கண்டது, 600 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது.

இந்திய சினிமாவின் அந்தஸ்தை உலகறிய செய்த இப்படம் சீனாவில் மொழிபெயற்பாகி வெளியாக இருக்கும் முதல் தென்னிந்திய படமாக உயர்ந்துள்ளது. தற்போது முதல் முறையாக NDTV யின் இவ்விருதினை இப்படம் பெற்றுள்ளது. பட குழவின் சார்பாக இவ்விருதினை பெற்றுக்கொண்ட ரானா டகுபதி. இப்படத்தின் படபிடிப்புகள் 320 நாட்களிலேயே நாங்கள் முடித்துவிட்டோம், ஆனால் இதன் கிராபிக் வேலைகள் முடிய மூன்று வருடங்கள் ஆனது என்று கூறினார் ரானா.

ஹாலிவுட் படமான "ஜுராசிக் வேர்ல்ட்" படத்திற்கு கிராபிக் வேலைகள் செய்த, அதே குழுவினர் தான் பாகுபலி படத்திற்கும் கிராபிக் பணிகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கிராபிக் காட்சிகளுக்காக மட்டுமே 85 கோடி ரூபாய், செலவு செய்துள்ளனர்.

இப்படத்தில் மொத்தம் 4,500-5,000 கிராபிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன, அதாவது இப்படத்தின் 90 சதவிகிதம் காட்சிகள் கம்ப்யூட்டர் VFX எனப்படும் கிராபிக்ஸ் வேலைப்பாடுகளால் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பல விருதுகளை பாகுபலி பெறும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் தனது முதல் விருதை பெற்றிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!