வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (25/09/2015)

கடைசி தொடர்பு:12:49 (25/09/2015)

கட்டுப்பாட்டைத் தளர்த்திய நயன்தாரா

 மலையாளத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் தான் கொடுக்க வேண்டும் என தனக்குத் தானே போட்டுக்கொண்ட கட்டுப்பாட்டைத் தளர்த்துள்ளார் நயன்தாரா. மலையாளத்தில் கடைசியாக நயன்தாரா மம்மூட்டியுடன் நடித்து வெளியான படம் பாஸ்கர் த ராஸ்கல். 

இந்தப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்ததோடு ஒரு குழந்தைக்குத் தாயாக வீட்டில் ஹோம் மேட் சாக்கலேட்டுகள் செய்து வாழ்வில் முன்னேறும் பெண்ணாகவும் நடித்திருப்பார். என்னதான் சொந்த மண் மலையாள சினிமாவாகினும் தமிழுக்கே முன்னுரிமை என்ற ரீதியில் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வீதம் தெலுங்கு, மலையாளம் என நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் நயன்தாரா. 

சமீபத்தில் இயக்குநர் சஜன் மம்மூட்டிக் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தின் கதையை நயனிடம் கொடுத்துள்ளார். கதையைப் படித்த நயன்தாரா சிறிதும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார். காரணம் இதுவரை மலையாளத்தில் நயன்தாரா ஏற்றிராதப் பாத்திரமாம். 

மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்துகொண்ட இரு தம்பதிகளின் ஈகோ பிரச்னைகள் அதைச் சூழ்ந்த கதைதான் படமாம். இரண்டு வருடம் கழித்துதான் அடுத்த படம் என்றக் கட்டுப்பாடோடு இருந்த நயன் நல்லகதை என்றவுடன் தற்போது ஓகோ சொல்லியுள்ளார் என இயக்குநர் சஜன் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்