ஹீரோயின்களைப் புலம்ப விட்ட மகேஷ் பாபு!

யூடியூப் புகழ் சாந்தினி சௌத்ரி, மகேஷ் பாபு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இன்றைய பல கதாநாயகிகளின் கனவு, மகேஷ் பாபுவுடன் இணைத்து ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பதே. ஆனால் இந்த அதிஷ்டம் சாந்தினி சௌத்ரிக்கு அடித்துள்ளது. நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் , தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிகொண்டவர் சாந்தினி சௌத்ரி.

கெடுகாடு படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சாந்தினி சௌத்ரி, மகேஷ்பாபு தற்போது நடித்துவரும் 'பிரம்மோத்சவம்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதோடு, சில காட்சிகளிலும் நடித்துள்ளார். இது சாந்தினி சௌத்ரிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என தெலுங்கு திரை வட்டாரங்கள் கருதுகின்றன.

மேலும் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் பிரணிதா ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.மேலும் மகேஷ் பாபுவின் படம் எனில் முன்னணி நாயகிகளே ஒரு பாட்டில் ஆடவும் ஓகே சொல்வார்கள்.

அப்படித்தான் ஸ்ருதி ஹாசன், பூர்ணா என பலரும் மகேஷ் பாபுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளனர். இந்நிலையில் முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு வாய்ப்பை தனதாக்கியுள்ளார் சாந்தினி.இதனால் பல நாயகிகள் மகேஷ் பாபுவை நினைத்து கொஞ்சம் வருத்தத்தில் உள்ளதோடு யூடியூபிற்கு இவ்வளவு பவரா என யோசிக்கவும் துவங்கிவிட்டனர்.  

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!