வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (28/09/2015)

கடைசி தொடர்பு:18:32 (28/09/2015)

பழி சொல்லிய நாகார்ஜுனா குடும்பம், பதிலடி கொடுத்த ராஜமௌலி!

பிரம்மாண்ட பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயன் ஷோ பிஸினஸ் என்ற பெயரில் சினிமா விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த விளம்பர நிறுவனம் வாயிலாக பல தெலுங்குப் படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. டீஸர்கள், டிரெய்லர்கள், போஸ்டர்கள் உருவாக்கமே இந்த நிறுவனத்தின் பிரதான வேலை.

இந்நிலையில் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அறிமுகமாகும் ‘அகில்’ படத்தின் விளம்பர வேலைகள் கார்த்திகேயனிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் ஷோ பிஸினஸ் நிறுவனம் உருவாக்கிய இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. பலரும் இந்த டிரெய்லர் சரியில்லை என விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். மேலும் படக்குழுவுக்கும் பிடிக்கவில்லையாம்.

இதை முன்னிட்டு அகில் உள்ளிட்ட படக்குழுவும் அவரது குடும்பத்தாரும் டிரெய்லர் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் எதிர்பார்த்த வரவேற்பை அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டு சற்றே கோபமடைந்த கார்த்திகேயனின் தந்தையும் பிரபல இயக்குநருமான ராஜமௌலி இந்த டிரெய்லர் வெளியிடுவதற்கு முன்பே நாகார்ஜுனா, அகில், வி.வி.வினாயக் உள்ளிட்ட மொத்தப் படக்குழுவும் பார்த்தனர்.

அப்போதே சொல்லியிருக்கலாமே பிடிக்கவில்லை என்று. அப்போது டிரெய்லரைப் பார்த்து விட்டு மிகவும் பிடித்திருப்பதாகத்தானே சொன்னார்கள். இப்போது தக்க வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் பழியைத் தூக்கி கார்த்திகேயன் பெயரில் போடுவது என்ன நியாயம். ராஜமௌலியின் இந்த பதிலடிக்கு தற்சமயம் படக்குழுவிடம் அமைதியே பதிலாக இருக்கிறது. எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்