மகேஷ்பாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு பணத்திமிர் - கடுமையாகச் சாடும் ராம் கோபால் வர்மா?

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் பிரகாஷ் ராஜ், மகேஷ் பாபு உள்ளிட்ட பிரபலங்கள் கிராமங்களைத் தத்தெடுப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு, பிரகாஷ் ராஜ் இருவரும் சமீபத்தில் அந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் ஆளுக்கொரு கிராமத்தைத் தத்தெடுத்தனர். பலரும் இதனை வரவேற்றுள்ளனர். எனினும் விவரம் அறிந்த சிலர் இதை விமர்சித்து வருகிறார்கள். இயக்குநர் தேஜா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபலங்கள் கிராமங்களைத் தத்தெடுப்பது வரி விலக்கை முன்வைத்தே. என்றார்.

இதுபற்றி  ராம் கோபால் வர்மா கூறுகையில், கிராமங்களையும், கிராம மக்களையும் பிச்சைக்காரர்களாக மாற்றி இவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். தங்களது பணத்தால் கிராமவாசிகளை யாசகர்களாகவும், அனாதைகளாகவும் சித்தரிக்கிறார்கள் எனவும்  இவர்கள் உண்மையில் கிராமங்களைத் தத்தெடுத்து ஆவண செய்கிறார்களா எனவும் கேள்விகள் கேட்டுள்ளார். முதலில் அரசாங்கம் இதை அனுமதிக்கவும் கூடாது எனவும் கூறியவர் இன்னும் சில கேள்விகளைக் கேட்டுள்ளார்.

இந்தப் பிரபலங்கள் ஏன் சேரி ஏரியாக்களை தத்தெடுப்பதில்லை. அங்கே தான் அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் பல ஏழை மக்கள் வாழ்கிறார்கள்.  இந்தத் தத்தெடுக்கும் முறை மீண்டும் மன்னராட்சி கலாச்சாரத்திற்கே கொண்டு செல்லும் எனவும் கூறி வரிசையாக பல ட்வீட்டுகளை போட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.

எனக்குத் தெரிந்து எந்த ஒரு பெரிய நட்சத்திரத்திற்கும் அழுக்கான இடங்களை தத்தெடுத்து அழகுபடுத்தும் அளவிற்கு மனது இல்லை என்றே கூறவேண்டும் என் ராம் கோபால் வர்மா விமர்சித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!