வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (28/09/2015)

கடைசி தொடர்பு:16:51 (28/09/2015)

நாகார்ஜூனா-அமலா மகனை அறிமுகப்படுத்துகிறார் ரஜினி?

தெலுங்குநடிகர் நாகார்ஜூனா அமலா தம்பதியினரின் மகன் அகில் கதாநாயகனாகிவிட்டார். அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் தெலுங்குப்படத்தின் பெயரும் அகில்.

இந்தப்படம், அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. படத்தைத் தெலுங்கில் வெளியிடும் அதேநாளில் தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அறிமுகமாகும் முதல்படத்தையே தமிழிலும் வெளியிடுவதன் மூலம் ஒரேநேரத்தில் இரண்டுமாநிலங்களிலும் மகனை நடிகனாக அறிமுகம் செய்ய நாகார்ஜூனா திட்டமிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தெலுங்கில் அகிலுக்கு அறிமுகம் தேவையில்லை, நாகார்ஜூனா மகன் என்கிற அறிமுகமே போதும். தமிழில் அதுமட்டும் போதாது என்பதால் ரஜினியை வைத்து அகிலை அறிமுகம் செய்யலாம் என்று திட்டமிட்டிருப்பதாக தெலுங்குஇணையங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இது உண்மையா? என்று விசாரித்தால், அப்படி எதுவும் இல்லை, ரஜினி இப்போது கபாலி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமாட்டார் என்று சொல்கிறார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்