ஆபாச எஸ் எம் எஸ் அனுப்பியவரின் மண்டையை உடைத்த டிசைனர்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் மங்கா ரெட்டி. இவரும் துணை இயக்குனர் சரத்குமார் என்பவரும் நண்பர்களாகப் பழகி வந்தனராம். அவர்கள் தினமும் செல்போனில் பேசிக் கொள்வார்களாம். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவும் அவர்கள் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது சரத் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மங்கா ரெட்டி கிஷன் என்பவரை அழைத்துக் கொண்டு பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சரத் குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் சரத் குமாரை திட்டியதுடன் இரும்புக் கம்பியால் அவரின் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சரத் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சரத் பஞ்சரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் புகார் அளித்த வேகத்தில் மங்காவும் காவல் நிலையத்திற்கு வந்து சரத் மீது புகார் அளித்தார்.சரத் தனக்கு செல்போனில் ஆபசமாக மெசேஜ் அனுப்பியதாகவும் அவரை தட்டிக் கேட்க அவரின் வீட்டிற்கு சென்றபோது அவர் தன்னை தாக்க வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை தாக்க வந்த சரத்தை தள்ளிவிட்டபோது அவர் வாஷிங் மெஷின் மீது மோதி அவர் தலையில் காயம் ஏற்பட்டது என்று மங்கா தெரிவித்துள்ளார். நண்பர்களுக்குள் மோதல் வந்தால் வம்புதான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!